00:00
04:41
காதல் என்னுள்ளே வந்த நேரம் அறியாமல்
நாட்கள் இப்படி ஓடுதே வாழ்வில்
நானும் உன்னுடன் நடக்கிற நேரம் இந்நாளில்
சாலை அத்தனை அழகாய் மாறும்
என் வீட்டைத் திடலாக்கி விளையாடும் பறவைப் போல்
மனதின் உள்ளே வந்தாடுவதாரோ
என் சுவாச அறையாகி எனைத் தாங்கும் உடலாகி
உயிர் வாழ கூட்டிச் செல்வது யாரோ
காதல் என்னுள்ளே வந்த நேரம் அறியாமல்
நாட்கள் இப்படி ஓடுதே வாழ்வில்
நானும் உன்னுடன் நடக்கிற நேரம் இந்நாளில்
சாலை அத்தனை அழகாய் மாறும்
அர்த்தம் இல்லா வீணான வார்த்தைகளை
நான் பேசும் வேளையிலும் ரசிப்பாய்
அளவில்லா காதலையும் எந்த சூழலிலும்
நான் கேட்கும் முன்னே தருவாய்
உன் முக தசைகளில் எங்கே வெட்கம் உள்ளதென்று
நீ பேசும் நேரம் எல்லாம் நானும் தேடித் பார்ப்பேன்
குளிர் காய்ச்சல் ஏதும் வந்தால்
உன்னுள்ளே நானும் வந்தால்
மெதுவாய் சரியாய் அது போகாதா
காதல் என்னுள்ளே வந்த நேரம் அறியாமல்
நாட்கள் இப்படி ஓடுதே வாழ்வில்
நானும் உன்னுடன் நடக்கிற நேரம் இந்நாளில்
சாலை அத்தனை அழகாய் மாறும்
வாழ்வினிலே உன் மூச்சு தூரத்திலே
உன்னோடு இல்லை என்றால் தவிப்பேன்
வாழும் நாட்களும் ஆயுள் முழுதிலும்
உன் வாசத்திலே பிழைப்பேன்
என் பலம் பலவீனம் எல்லாமும் தெரிந்தாலும்
உன் அன்பு வந்த பின்னே நாளும் மாறிப் போகும்
என் குணம் குனவீனம் உன்னோடு சேர்ந்து விட்டால்
நலமாய் நலமாய் அது மாறாதா
காதல் என்னுள்ளே வந்த நேரம் அறியாமல்
நாட்கள் இப்படி ஓடுதே வாழ்வில்
நானும் உன்னுடன் நடக்கிற நேரம் இந்நாளில்
சாலை அத்தனை அழகாய் மாறும்
என் வீட்டைத் திடலாக்கி விளையாடும் பறவைப் போல்
மனதினில் உள்ளே வந்தாடுவதாரோ
என் சுவாச அரியாகி எனைத் தாங்கும் உடலாகி
உயிர் வாழ கூட்டிச் செல்வது யாரோ